BREAKING NEWS

அயப்பாக்கம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

சென்னை அருகே உள்ள அயப்பாக்கம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

78 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி செயல் அலுவலரும் தலைவருமான துரைவீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீண்ட காலமாக குடியிருக்கும் வீடுகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் எனவும் சென்னை அருகே 1.5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அயபாக்கம் ஊராட்சியில் ஏறக்குறைய 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.அடிப்படை வசதிகளை நவீனப்படுத்த அயப்பாக்கம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதில் அளித்த ஊராட்சி தலைவர் அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்குள் மாநகராட்சியோடு இணைப்பது அல்லது நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார்.இதில் 1000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்
இதனைத்தொடர்ந்து சமபந்தி நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS