அரக்கோணம் அடுத்த சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பூத் எண் 70, 71, 72 ஆகிய மூன்று வாக்குச்சாவடி மையங்களில் பரபரப்பாக வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி மற்றும் 2 பேர் காரில் வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தனர் .
வினோத் காந்தியுடன் வந்த நபர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சி சால்வை அணிந்து கொண்டிருந்த நபரிடம் அருகில் வந்து எப்படி உள்ளே வரலாம் ? யார் உங்களை உள்ளே விட்டது ? போலீஸ் எங்கே என்று கேள்வி எழுப்பினார் .
அப்போது அங்கிருந்த பாமகவினர் உங்களது கார் எப்படி உள்ளே வந்தது. உங்களை யார் உள்ளே விட்டது? நீங்கள் எப்படி திமுக துண்டு அணிந்து கொண்டு வரலாம் என்று பாமக திமுகவினிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து வினோத் காந்தியின் கார் அங்கிருந்து மெதுவாக வெளியே செல்ல முயன்ற போது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.