BREAKING NEWS

அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.

அரக்கோணம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரியில் மர்மநபர்களால் வாலிபர் வெட்டிக் கொலை. சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் தாலூகா போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர் விக்கி(எ)விக்னேஷ்(23). இவரது மனைவி யாமினி(20). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றது. விக்னேஷ் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய வாலிபர் விக்னேஷ் இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள மாந்தோப்பு அருகே கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பது தெரிய வந்தது.உடனடியாக அரக்கோணம் தாலூகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட வாலிபர் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மனைவி யாமினி புகாரின் பேரில் அரக்கோணம் தாலூகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்கள்.

CATEGORIES
TAGS