அரக்கோணம் அருகே ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெரு மூச்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நூதன அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில் புதிய சாமி சிலைகள் கறிக்கோள் வீதி உலா, சைணவசம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சாமி சிலைகளுக்கு கண் திறந்தல், கணபதி ஹோமம், திரவிய ஹோமம், பூர்ணா கோபி, புதிய சாமி சிலை பிரதிஷ்டை செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று மகா கும்பாபிஷேக விழா இரண்டாம் கால கலச பூஜை, தம்பதியர் ஹோமம், திரவிய ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், ஆகிய பூஜைகளை தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கலசங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் மகா கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து கொண்டனர்…