BREAKING NEWS

அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 15 வருடங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொண்ட நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 15 வருடங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொண்ட நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரிய பகுதியில் கடந்த 15 வருடங்களாக அடிப்படை வசதியான சாலை, குடிநீர், தெரு விளக்கு இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி பட்டு வந்தனர்.

இதனை அடுத்து அப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று ஏற்கனவே குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது

அதனைத் தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 15 வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட நான்காவது வார்டு நகர மன்ற உறுப்பினர் செந்தில்குமார் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்…

Share this…

CATEGORIES
TAGS