அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று பாமக வேட்பாளர் வாக்குறுதி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது வேட்பாளர் பாலு பேசியதாவது .
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன்.நெடுஞ்சாலையில் ரோடு ஓரமாக இருந்த 3 ஆயிரத்து 324 டாஸ்மாக் கடையை ஒரே நாளில் இரவோடு இரவாக முடியுள்ளேன்.மேலும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்த வலியுறுத்துவேன்.ஓஏபி மாதம் ரூபாய் 3000மாக உயர்த்த வலியுறுத்துவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதில் பாமக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன்,மாநில இளைஞரணி செயலாளர் தீனதயாளன்,மாவட்ட துணை செயலாளர் ராமசாமி,வழக்கறிஞர் சக்கரவர்த்தி,காவனூர் சுப்பிரமணி,பஞ்சா மேஸ்திரி,பாஜக மாவட்ட தலைவர் விஜயன்,மாவட்ட செயலாளர் கண்ணன்,புஷ்பராஜ்,அமமுக மாவட்ட செயலாளர் பார்த்திபன்,ஒன்றிய செயலாளர் மணிவண்ணன்,தமாக பொதுக்குழு உறுப்பினர் மோகன்காந்தி,ஒன்றிய செயலாளர் தேவேந்திரன்,ஓபிஎஸ் அணி அகிலா ஆறுமுகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.