அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அதன் தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் புதிய ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி நிகழ்ச்சியை துவக்கி வைத்து கண்டன உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்ட பணிகளால் போடப்பட்ட நிலைய அணுகு சாலையை உடனே அடியாக சீர் செய்ய வேண்டும், ஆண்டுக்கு ரூபாய் 50 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி தரும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சதாப்தி மற்றும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இங்கு நிற்காமல் சென்று கொண்டிருக்கும் மங்களூர் மேல் திருவனந்தபுரம் மெயில் சூப்பர் தாதர் விரைவு ரயில் மற்றும் போடிய நாயக்கனூர் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் அரக்கோணம் ரயிலில் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும், மிக முக்கியமாக சமீப காலமாக ரயில் பணிகள் இரவு நேரங்களில் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி வரும் இயக்க கோளாறுகள் உடனடியாக சரி செய்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் பேரவை தலைவர் தேவராஜ், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க முன்னாள் பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருவள்ளூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஜெயபால் ராஜ், திருநின்றவூர் ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், பட்டாபிராம் ரயில் பயணிகள் சங்க பொதுசெயலாளர் ஸ்டான்லி, அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க கௌரவ தலைவர் அசோகன், பொதுச் செயலாளர் குணசீலன், கூடுதல் பொதுசெயலாளர் ரகுநாதன், பொருளாளர் ஏகாம்பரம் உட்பட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.