BREAKING NEWS

அரசியல்

ராகுல் காந்திக்கு நன்றி.. தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்”..தெறிக்கவிட்ட அண்ணமாலை

எந்தக் காரணத்தைக் கொண்டும் மோடி திரும்பவும் வர மாட்டார் என ராகுல் கூறினார். மீண்டும் 2019 அவர் பிரதமரானார். 303 இடங்களை கைப்பற்றினோம். இப்போது  எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்கிறார், நிச்சயம் வருவோம். தனி மெஜாரிட்டியில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்வார்கள்.

ராகுல் காந்தி எதையெல்லாம் நடக்காது என்று கூறுகிறாரோ அதையெல்லாம் பாஜக நடத்திக்காட்டும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் ஜாதகப்படி அவர்  சொல்வதற்கெல்லாம் எதிராகவே நடக்கும் என்றும், அவர் தமிழகத்தை பாஜக எந்த ஜென்மத்திலும் ஆள முடியாது என சொன்னவுடன் தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் அந்த அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் மத்திய பாஜக அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. இந்நிலையில்தான் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்பி ராகுல் காந்தி இந்த விவகாரங்களை மேற்காட்டி உரையாற்றியுள்ளார். அப்போது அவர் மோடி அரசின் நடவடிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தார். அதாவது  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில்  வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் இரண்டு இந்தியா உள்ளது, ஒன்று பணக்கார இந்தியா மற்றொன்று ஏழைகளுக்கான இந்தியா, இந்த இரண்டு இந்தியாக்களுக்கு இடையேயான இடைவெளி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இரண்டு இந்தியாவையும் சமபடுத்துவதற்கான திட்டம் பிரதமர் மோடியிடம் இல்லை.

அமைப்புசாரா துறை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக் இன் இந்தியா திட்டம், மேட் இன் இந்தியா திட்டம் ஒருபோதும் இந்தியாவில் சாத்தியம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். இந்தியா என்பது ஒன்றியங்களின் கூட்டமைப்பு இது ராஜ்ஜியம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி பண்பாடு கலாச்சாரம் உள்ளது. பிரதமர் பதவி என்பது ஒரு ராஜாங்கம் அல்ல, மாநில அரசுகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு மத்திய மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இந்தியாவின் மையத்தில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மோடி ஆளநினைக்கிறார். விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக டெல்லியிலும் போராட்டம் நடத்தினார்கள் ஆனால் அது  கண்டுகொள்ளப்படவில்லை. தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் கேரளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளது. அதை மத்திய அரசு மதிப்பதே இல்லை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அது குறித்து இதுவரை எந்த பரிசீலனையும் இல்லை.

தமிழ்நாட்டை அடக்கியாள நினைத்தால் அது தோல்வியில்தான் முடியும். பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது என ராகுல் ஆவேசமாக கூறினார்.  அவரின் இந்த பேச்சு தேசிய அளவில்  டெரெண்டாகி வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சை பாஜக அதிமுக உள்ளிட்டகட்சியினர்  கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்தியில் பேச்சு குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத்தலைவர் அண்ணாமலை, ராகுல் காந்தி எதையெல்லாம் நடக்காது என்று கூறுகிறாரோ அதையெல்லாம் பாஜக நடத்திக்காட்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பாஜக எந்த ஜென்மத்திலும் ஆட்சி செய்ய முடியாது என ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசுகிறார். அவரது பேச்சை நான் வரவேற்கிறேன். ஏனென்றால் அவர் அப்படி சொன்னால் தான் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். எந்த காரணத்தைக் கொண்டும் மோடி பிரதமராக மாட்டார் என்று கூறினார் ஆனால் 2014இல் மோடி பிரதமரானார்.

 

எந்தக் காரணத்தைக் கொண்டும் மோடி திரும்பவும் வர மாட்டார் என ராகுல் கூறினார். மீண்டும் 2019 அவர் பிரதமரானார். 303 இடங்களை கைப்பற்றினோம். இப்போது  எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்கிறார், நிச்சயம் வருவோம். தனி மெஜாரிட்டியில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்வார்கள். ராகுல் காந்தி  அவர்களின் ஜாதகப்படி அவர் எதையெல்லாம் கூறுகிறாரோ, அதற்கு எதிராகத்தான் நடக்கும். அவர் அந்த வார்த்தையை சொன்னவுடன் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி, மோடிக்கு கிடைத்த லக் இப்போது தமிழ்நாடு பாஜகவுக்கும்  அடிக்க வேண்டும். தனியாக இருந்து  மக்களுக்காக பணியாற்றிய மனிதர்தான் மோடி. அவரை தட்டி எழுப்பி 2014இல் டெல்லியில் அமர்த்தியிருக்கிறோம். நிச்சயம் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )