BREAKING NEWS

அரசியல்

“ஒரு கூட்டமே இருக்கு”.. உதயநிதி பற்றி ஆளுநர் ரவிக்கு பறந்த புகார்.. நேராக போய் சந்தித்த அதிமுக மூவர்”

சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேற்று ஆளுநரை சந்தித்து முக்கிய புகார் அளித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அதிமுக இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கிறது. இதையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் களத்தில் நேரடி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேர்தல் ஆணையம் இந்த நிலையில்தான் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணைய நிர்வாகிகள் செயல்படுவதாக அதிமுக புகார் வைத்து வருகிறது. திமுகவிற்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். அதிமுகவினர் பிரச்சாரம் செய்யும் போது அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் இடையூறாக உள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலை முறையாக, நேர்மையாக நடத்த வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆளுநர் ரவி இந்த நிலையில்தான் நேற்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து நேற்று அதிமுகவினர் புகார் அளித்தனர். முக்கியமாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுகவினர் புகார் அளித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தனர். அதில், உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வேனில் பேரணி நடத்துகிறார்.

பேரணி திறந்த வேனில் பேரணி நடத்துகிறார். தேர்தல் ஆணையம் இப்படி பேரணி நடத்த தடை விதித்து இருந்தது. ஆனால் அதை மீறி 3 நாட்களாக உதயநிதி வேனில் பேரணி நடத்தி வருகிறார். இது விதிமீறல் . தேர்தல் ஆணையம் இதை தட்டிக்கேட்காமல் திமுகவிற்கு துணை போகிறது என்று அதிமுகவின் மூவர் நேற்று புகார் அளித்துள்ளனர். அதோடு இதை பற்றிய வீடியோ ஆதாரங்களையும் ஆளுனர் ரவியிடம் அதிமுகவின் மூவர் அளித்துள்ளனர்.

 

 

உதயநிதி ஸ்டாலின்:

இது போக திமுக தேர்தல் களத்தில் ரவுடிகளை களமிறக்கி உள்ளது. திமுகவிற்கு ஆதரவாக பெரிய கூட்டம் ஒன்று தேர்தலில் களப்பணிகளை செய்கிறது. கோவை, சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் ரவுடிகள் திமுக சார்பாக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் திமுக ரவுடிகளை களமிறக்கி உள்ளது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி போலீசாரும் இதில் மௌனம் காக்கின்றனர் என்று ஆளுநரிடம் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் பெஞ்சமின் புகார் அளித்துள்ளனர். இதை பற்றி இன்று சேலத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். ஆளும் கட்சி அழுத்தத்திற்கு அடிபணிய கூடாது. இல்லையென்றால் அதிமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )