அரசியல்
திருச்சி பிப் 14
திருச்சியில் காலை முதலே வீடு வீடாகச் சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.
தமிழகத்தில் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டுக்கு போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஷாகிராபானு போட்டியிடும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல் அதிமுக சார்பில் 20வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி ஜவஹர், 33வது வார்டில் போட்டியிடும் சீனிவாசன் ஆகியோர் வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES திருச்சி