BREAKING NEWS

அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி. திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டிவலசு, ஆலச்சம்பாளையம், தாவன்தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், மக்களின் சில அடிப்படை தேவைகளான உண்ண உணவு, குடிநீர், கல்வி, வீடு, சுகாதார சூழல் போன்ற தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் முழு முதல் கடமை. இதை உணர்கிறவர்கள்தான் ஆட்சி பொறுப்பிற்கு வரவேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்படும் பொதுமக்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய திட்டங்களுக்கு அதிமுக ஆதரவாக இருந்ததே தவிர என்றைக்கும் எதிர்க்கவில்லை.

 

மேலும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களுடைய வேட்பாளர்கள் செய்துதர தயாராக உள்ளனர். ஆகவே, திமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )