BREAKING NEWS

அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்

 

 

ராணிப்பேட்டை மாவட்டம்

சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்

மேலும் சோளிங்கர் பேருந்து நிலையம் செல்லும் இடத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினால் அச்சாலையில் பயணிக்க கூடிய பெண்கள் மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மது பிரியர்களால் பல்வேறு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால் மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்

எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுபான கடையினை உடனடியாக அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அப்பகுதி மக்கள் வருகை தந்து ஆட்சியரிடம் மனுவினை வழங்கியுள்ளனர்

Share this…

CATEGORIES
TAGS