அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்

சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் HIV நோயாளியை மனதளவில் காயப்படுத்தும் மருத்துவமனை சக ஊழியர்கள்…?
மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தங்கமாரி என்ற பெண் தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு தொழிலாளியாக கடந்த 7 வருடமாக பணிபுரிந்து வருகிறார் .
இந்நிலையில் தன் கணவன் மூலமாக தனக்கு வந்த HIV நோயை காரணம் காட்டி, மேலாளர் சுகந்தி மற்றும் மேற்பார்வையால் முத்தையா ஆகியோர் தன்னை தரக்குறைவாக நடத்துவதாகும், பொதுவில் அதை சொல்லி அவமானப்படுத்தி மனதளவில் காயப்படுத்துவதாகவும் கூறி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அவர், தான் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனருக்கு மனு அளித்தும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து தமிழக அரசும், மனித உரிமை ஆணையமும் இந்த விஷயத்தில் தலையிட்டு, தனக்கிருக்கும் நோயை காரணம் காட்டி மனதளவில் காயப்படுத்தும் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்
