BREAKING NEWS

அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை

அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை

அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது கல்லை போட்டு கொலை

சிசிடிவி காட்சிகளை வைத்து அதே பகுதியில் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்டவனை தேடி வரும் போலீசார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மற்றும் இதர கடைகள் செயல்பட்டு வருகிறது இங்குள்ள அரிசி கடையில் வெளியே கூலிவேலை செய்பவர்கள் இரவில் தூங்குவது வழக்கம்

இந்த நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி சின்னக் குழந்தை ( 75) என்ற மூதாட்டியின் தலையின் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை போட்டுள்ளார்

இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவனை பிடிக்க முயன்ற நிலையில் அவன் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டான் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதில் பதிவான காட்சிகளை வைத்து அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபரை குடியாத்தம் நகர போலீசார் தேடி வருகின்றனர்

Share this…

CATEGORIES
TAGS