BREAKING NEWS

அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஏப்ரல் 26 ந்தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பொருளாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

செந்துறை வட்டதலைவர் சிந்தனைசெல்வி அனைவரையும் வரவேற்றார்.
ஆர்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம், ஈட்டிய விடுப்பு சரண்டர் திட்டம் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சிதுறை முன்னாள் மாவட்ட செயலாளர் பழனிவேல் பேசினர்.

 

பின்னர் 8.00 மணி நேர வேலையை 12.00 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்தும் கோரிகைகளை விரைவில் நிறைவேற்றவேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர் இணைசெயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS