BREAKING NEWS

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி திடீரென ஆய்வு. மேற்கொண்டார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்க கோரி இயக்குனரிடம் மருந்து வழங்கியவர்கள் மனு

ஆய்வின்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளிடம் நோய்கள் குறித்தும் அதற்குண்டான சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்,

பின்னர் மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, பொது மருத்துவம் குழந்தைகள் நலப் பிரிவு அறுவை சிகிச்சை பிரிவு எலும்பு சிகிச்சை பிரிவு மற்றும் சிடி ஸ்கேன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைகளை நேரில் பார்வையிட்டார்.

மேலும் அனைத்து பணிகளும் கவனமாக செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களின் நலன் கருதி விரைவில் அனைத்து ஸ்கேனிங் வசதிகள் மற்றும் செவிலியர் தங்கும் விடுதிகள் பயன்பாட்டுக்கு வரும் எனவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசதிகளை அதிகரிக்க அதற்கான ஆய்வு பணிகளை ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்க கோரி இயக்குனரிடம் மருந்து வழங்கியவர்கள் மனு அளித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS