அரியலூர்: ஆவணி அவிட்ட விழா : பூணூல் மாற்றி வழிபாடு.
அரியலூர்: ஆவணி அவிட்ட விழா : பூணூல் மாற்றி வழிபாடு.
ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் வரும் அவிட்ட நட்சத்திரத்தில், தாங்கள் அணிந்து கொண்டுள்ள பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து, வேதம் படிப்பதை தொடங்குவது, பழங்கால முதல் நடைபெற்று வருகிற ஐதீகம். ஆண்டும் ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணியும் நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்படுகிறது.
இதனிடையே அரியலூரில் உள்ள அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூணூல் அணிந்தவர்கள் வேதங்கள் படித்து, தேவ தர்ப்பணம் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் செய்து வழிபட்டனர். இதில் அரியலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிய பூணூலை அணிந்து கொண்டனர்.
CATEGORIES அரியலூர்