அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மேலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா முன்னதாகவே கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
தினமும் செல்லியம்மனுக்கு தேன் பால் தயிர் இளநீர் விபூதி சந்தனம் குங்குமம் போன்ற 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு பூ செண்டு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு செல்லியம்மன் விதி உலா நடைபெற்றது
அதன்படி தேர் கட்டுமானப் பணிகள் முடிந்து தேர் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டது. விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி தங்களது நிலங்களில் விளைந்த முந்திரி ,மா, பலா ஆகியவற்றை கையிறுகளில் கோர்த்து தேரில் கட்டி தொங்கவிட்டனர்.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட செல்லியமனையும் மாரியம்மனையும் தேரில் ஏற்றி அமர்த்தி அதன் பின்னர் காலை பத்து மணிக்கு தேர் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. .
தேர் சன்னதியை அடைந்ததும் ஆண்கள் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சனமும், பெண்கள் நடை கும்பிடு போட்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள் இத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு செல்லியம்மனின் அருளாசி பெற்று சென்றனர் இதில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.