அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சி நகர் மன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டால் பரபரப்பு..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியின் உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. நகர் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது வார்டு பணிகள் பகுதிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் நகராட்சி அதிகாரிகள் உரிய தகவல்களை அளிப்பதில்லை இதனால் பொதுமக்களுக்கு தகவல் அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
இதனை ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்களில் எடுத்துக் கூறியும் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும் மறைந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி பணிகள் ருபாய் 2 கோடிகளுக்கு மேல் நடைபெற்றதாகவும் மன்றத்தில் பதிவு செய்தனர்.
பேசிய நகராட்சி ஆணையர் நகராட்சி அதிகாரிகள் வரும் காலங்களில் முறையான தகவல்களை உறுப்பினர்களுக்கு வழங்குவார் என தெரிவித்தார்.