அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா தொடக்கம்
நீதிமன்றங்களில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது.
அதனை ஒட்டி அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச வார விழா தொடங்கப்பட்டது.
இதில் பேசிய நீதிபதிகள் வழக்குகளை சமரச தீர்வு மூலம் தீர்வு காண உறுதி எடுத்துக் கொள்வோம். சமரசம் செய்து கொள்வதனால் இருவருக்குமே சாதகமே இருவருமே வெற்றி பெறுகிறார்கள். சமரச தீர்வு மூலம் நேரம் மிச்சமாகிறது பணம் மிச்சமாகிறது எனவே வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை சமரச தீர்வு மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.
பின்னர் சமரச தீர்வு காண்போம் என வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டனர்.
இதில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.