BREAKING NEWS

அரியலூர் வெளிநாட்டில் இறந்து தனது கணவனின் உடலை மீட்டு தர கோரி மாவட்ட மனைவி மற்றும் மகன் ஆட்சியரிடம் மனு.

அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிகாட்டில் வசிப்பவர் ஜீவானந்தம்.

ஜீவானந்தம் துபாயில் உள்ள ஐ.என்.டி என்ற நிறுவனத்தில் ஃபோர்மேனாக பணியாற்றி வந்தார் .

இந்நிலையில் ஜீவானந்தத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜீவானந்தம் பணிபுரிந்த நிறுவனத்தினர் தமிழகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் துபாய் நாட்டில் இருந்து உடலை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS