BREAKING NEWS

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக  சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற யாகசாலை பூஜைகள் முடிவற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு கோவிலைச் சுற்றி வலம் வந்தது. இதனையடுத்து அருள்மிகு விநாயகர், செல்லியம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் செல்லியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS