அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பல்வேறு சிறப்பு பூஜை மற்றும் 18 சித்தர்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கரூர்,கோவை ஈரோடு,திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் நல்லிரவு 12 மணி அளவில் 18 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.