அருள்மிகு ஶ்ரீவள்ளி, தெய்வானை சமேத குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீவள்ளி, தெய்வானை சமேத குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வெகு விமசியாக நடைபெற்றது.
வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தி அளித்தார்
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து அரோகரா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் குழுவினர்கள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அசம்பாவிதம் நிகழாமல் இருக்க புதுப்பேட்டை போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர்