BREAKING NEWS

அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் சுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவ சுவாமிக்கு பால் தேன் சந்தனம் திருநீரு இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மூலவர் சுவாமிக்கும் உற்சவர் சுவாமிக்கும் மலர்மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது .

இதில் கீழ் வீராணம் , பானவரம், பொன்னப்பந்தாங்கள், மங்கலம், ரங்காபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

தொடர்ந்து பக்தர்கள் காவடி செலுத்திலுயும் , நெய் தீபம் ஏற்றி வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமி வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.

ஆடி கிருத்திகை சிறப்பு பூஜையை திருக்கோவில் நிறுவனர் தேவா அவர்களின் குடும்பத்தாரின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS