BREAKING NEWS

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமிக்கும் ,உற்சவர் சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மூலவர், சுவாமிக்கும் உற்சவர் சுவாமிக்கும் மலர்மாலை பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது .

இதில் வேடந்தாங்கல், பானாவரம், காவேரிப்பாக்கம், நெமிலி, மின்னல் ,சாலை , கூத்தம்பாக்கம் , கீழ் வீராணம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி செலுத்திலுயும் , நெய் தீபம் ஏற்றி வைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமி வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள். இசை நிகழ்ச்சி வானவேடிக்கை நடைபெற்றது.

சுவாமி வீதி வுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகளை திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS