ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி
கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து சூலாயுதம் ஏந்தி துர்க்கை கோலத்தில் திரு விதிகளுக்கு எழுந்தருளி பவனி வரும் நிகழ்வு மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரம் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் – காளியம்மன் திருக்கோயில் ஆடிப்பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு சொந்தமான இக்கோயிலின் ஆடிப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வேலாயுதபுரம் உறவின்முறை காமராஜ் இளைஞரணி சங்கத் தலைவர் கேடிபி. அருண்பாண்டியன் தலைமையில் உறவின்முறை சங்கத் தலைவர் வேல்முருகேசன் முன்னிலையில் உறவின்முறை சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், மண்டகப்படிதாரர்கள், மகளிர், இளைஞரணி மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடை பெற்றது. அதற்கு முன்னதாக சிறுவர் சிறுமியர்களின் ஆடல், பாடல், நாடகம் மற்றும் விளையாட்டு போட்டிகள் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்றது.