BREAKING NEWS

ஆடிப்பூரத்தை முன்னிட்டு குத்தாலம் அருள்மிகு மன்மதீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு குத்தாலம் அருள்மிகு மன்மதீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம்.ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்து வளையல் பிரசாதத்தை வாங்கிச் சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் அருள்மிகு மன்மதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாசத்தை முன்னிட்டு ஆடி வெள்ளி ஆடி செவ்வாய் ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று ஆதிசக்தி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து குழந்தை பேர் இல்லாதவர்களுக்கும், தாலி பாக்கியம் நிலைத்திடவும்,நோய் நொடி நீங்கவும் கோவில் வாலாக வணிகர்கள் ஒன்று சேர்ந்து அம்பாளுக்கு சந்திரகாப்பு அலங்காரமும் வளையல் அலங்காரமும் நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஏராளமான பெண்களுக்கு வளையலும் அருள்பிரசாதமும் வழங்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS