ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றத்தின் 38-ம் ஆண்டு கஞ்சி கலய விழா.
ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றத்தின் 38-ம் ஆண்டு கஞ்சி கலய விழா.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் நல்லாத்துகுடி கிராமத்தில் அமைந்துள்ளது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம். இந்த வழிபாட்டுமன்றத்தின் 38-ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் இன்று நடைபெற்றது இந்த கஞ்சி கலய ஊர்வலத்தை முன்னிட்டு வாகனத்தில் அலங்கரிகப்பட்ட ஆதிபராசக்திக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று,பின்னர் சின்னக்கடைத்தெரு சியாமளா தேவி ஆலயத்திலிருந்து 200க்கு மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலயம் மற்றும் பால்குடம் தூக்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஓம் சக்தி, பராசக்தி எனக்கூறி நல்லாத்துக்குடியில் உள்ள ஆதிபராசக்தி ஆலயத்தில் பால் அபிசேகம் நடைபெற்றது.பின் அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று,தொடர்ந்து பக்தர்களுக்கு அண்னதானம் வழங்கப்பட்டது.