BREAKING NEWS

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக மீண்டும் மையப் பயிற்சி திட்டத்தின் கீழ் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

 

 

 

 

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி காரையாறு, அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் இன்று (04.08.2024) ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக மீண்டும் மையப் பயிற்சி திட்டத்தின் கீழ் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல அலுவலகம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் மண்டல மேலாளர் திரு குருசாமி அவர்கள் அறிவுரையின்படி மஞ்சப்பையினை விழாவில் அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் முதன்மை மேலாளர் நடராஜன் மற்றும் மேலாளர் திரு தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலக தாசில்தார் திரு செல்வன் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஒன்பதாம் அணி மணிமுத்தாறு தளவாய் திரு கார்த்திகேயன் அவர்களின் வழிகாட்டுதலின்படி வான் தந்தி பிரிவு ஆய்வாளர் திரு கண்ணன் அவர்களுடன் பத்து காவலர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் திரு கூடலரசன் மற்றும் சமூகஆர்வலர் வீரபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS