ஆட்சியர் அலுவலகம் முன்பாக போக்குவரத்து அலுவலகம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச .வளர்மதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி ஆகியோர் கொடியரசைத்து துவக்கி வைத்தனர் .
மேலும் இதில. ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை துண்டு பிரசுரமாக வாகன ஓட்டிகளிடம் 18 வயதுக்குட்பட்ட சிறார் எவரும் எந்த வாகனத்தையும் ஓட்டக்கூடாது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும்போது 4 வயதிற்கு மேல் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்தப் பேரணி சிப்காட் இ எஸ் ஐ வழியாக சிப்காட் வரை சென்றது இதில் காவலர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பின்பு நான்கு சக்கர லோடு ஆட்டோவிற்கு பின்புறம் சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இந்த நிகழ்ச்சியின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார் செங்குட்டு வேல் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போக்குவரத்து அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.https://youtu.be/pVtdcuG4cwg