ஆட்டோ எல்லையை விரிவுபடுத்த கோரியும், எல்லையை தாண்டி சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து உதகையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம்…
ஆட்டோக்களில் எல்லை அளவை அதிகப்படுத்த தடையாக உள்ள உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமாரை கண்டித்து கண்ணன் தோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு…
அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை…
மாவட்டம் உதகையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் நல சங்கம் சார்பில் தற்போதுள்ள 15 கிலோமீட்டர் தூரத்தை 30 கிலோமீட்டர் தூரமாக எல்லை அளவை அதிகப்படுத்த கோரி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 12 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போக்குவரத்து அலுவலரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் ஆட்டோக்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இயக்கி வந்தனர்.
இந்நிலையில் உதகையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா பகுதிக்கு ஆட்டோக்களில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர்.
அப்போது பைக்காரா காவல்துறையினர் மூன்று ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி எல்லை தாண்டி சென்றதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று ஆட்டோக்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் நலம் சங்கம் சார்பில் எல்லை அளவை விரிவு படுத்த கோரியும், எல்லை தாண்டி சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும், ஆட்டோக்களின் எல்லை அளவை அதிகப்படுத்த தடையாக உள்ள நகர மன்றத் துணைத் தலைவர் ரவிக்குமாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை இயக்காமல் காவல்துறையினர் அனுமதியின்றி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.