BREAKING NEWS

ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் போதை பொருள் ஒழிப்பு மனித சங்கிலி போராட்டம்

போதைப்பொருளை ஒழிக்கவும் அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் வைகைஅணை சாலைப்பிரிவில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு ஆண்டிபட்டி அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை உடனடியாக தடுக்கக்கோரியும் , போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்துபவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS