ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர் வீட்டின் கதவுகளை உடைத்து திருட்டு.

ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர் வீட்டின் கதவுகளை உடைத்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, 32ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருட்டு வீட்டில் இருந்தவர்கள் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தணிக்கையாளர் முருகேசன் இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்று விட்ட நிலையில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பூட்டை உடைத்து இரண்டு பீரோக்களையும் உடைத்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் 32 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்
இது தொடர்பாக பக்கத்து வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் வீடு உடைக்கப்பட்டு இருப்பதை வந்து பார்த்த முருகேசன் மற்றும் அவரது மனைவி ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி போலீசார் தடயவியல் நிபுணர்கள் குழு உதவியுடன் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நகையை பறிகொடுத்த பெண் ஜெய்ஸ்ரீ
கூறுகையில் ஆண்டிபட்டியில் காவல்நிலையம் பின்புறமாக இருக்கக்கூடிய காமராஜர் நகரில் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்றும் குற்றம்சாட்டியும் எந்த நேரமும் ஆள் நடமாட்டம் இருக்கக்கூடிய இந்த தெருவிலேயே திருட்டு நடைபெற்றுள்ளதாகவும்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாகவும் விளம்பர திமுக அரசு ஆட்சியில் இப்படிதான் இருக்குமா என்று நகை திருடப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்தார்.