BREAKING NEWS

ஆண்டிபட்டி அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

ஆண்டிபட்டி அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் கன்னியப்பபிள்ளை பட்டி ஊராட்சியில் மாயாண்டிபட்டி கிராமம் உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வைகை ஆற்று கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சரிவர தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆழ்துளை கிணறு மூலம் மாயாண்டி பட்டி கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மாயாண்டி பட்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத அதை கண்டித்து மாயாண்டி பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காளி குளங்களுடன் ஆண்டிப்பட்டி – தெப்பம்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ராஜதானி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டதால் ஆண்டிபட்டி – தெப்பம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS