BREAKING NEWS

ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த கடமானை தாக்கிய நாய்கள் காயத்துடன் பயந்து நின்ற மானை மீண்டும் காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்.

ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த கடமானை தாக்கிய நாய்கள் காயத்துடன் பயந்து நின்ற மானை மீண்டும் காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டாணாத்தோட்டம் வனப்பகுதியிலிருந்து தண்ணீரை தேடி மலையடிவார மாந்தோப்பிற்குள் புகுந்த கடமானை, தோட்டத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டினர்.

நாய்கள் கடித்ததில் கடமானின் கால் மற்றும் தொண்டை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சாலையோரம் காயத்துடன் பயந்து நடுங்கியபடி கடமான் நின்றிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், கடமானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் கடமான் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் கடம்மானின் காயங்கள் மீது வனத்துறையினர் மண் அள்ளி தூவினர். சிறிது நேரம் அங்கு நின்றிருந்த கடம்பான் மீண்டும் வனப்பகுதிக்குள் துள்ளி குதித்து ஓடியது.

Share this…

CATEGORIES
TAGS