ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் ஸ்ரீ விநாயகர்,பகவதி அம்மன்,முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் பழமையான விநாயகர் பகவதியம்மன் , முத்தாலம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் ஒரேநேரத்தில் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல்நாளான நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .பின்னர் இன்று அதிகாலை முதல் கோபூஜை ஆயகட்டு மந்திரங்களுடன் கூடிய இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .
அதனைத்தொடர்ந்து கடங்களை சுமந்து சிவாச்சாரியார்கள் கோவிலை ஊர்வலமாக சுற்றி கொண்டு சென்று பின்னர் விநாயகர் , பகவதி அம்மன் , முத்தாலம்மன் திருக்கோயில் கோபுர கலசங்களின் மீது 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியார்களால் ஒரே நேரத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீர் பகதர்கள் மீது தெளிக்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கும்பாபிஷேக விழாவையொட்டி மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.