ஆதி பீடபரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகத்தை ஒட்டி வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
ஆதி காமாட்சி அம்மன் ஆதி பீடபரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகத்தை ஒட்டி வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது .
வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்
ஆதி காமாட்சி அம்மன் என அழைக்கப்படும், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் கடந்த மாதம் 11 ஆம் தேதி கோவில் புரணமைப்பு பணி நிறைவு பெற்று பூரண கும்ப மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் தொடந்து காலை மாலை வேளைகளில் அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றது,
இந்நிலையில் நேற்று இரவு 48வது நாள் மண்டல அபிஷேகத்திற்கு ஒட்டி அம்மனுக்கு காலை முதல் பல்வேறு வகையான அபிஷேகமும், 108 சங்காபிஷேகம் நடைபெற்று, இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் அம்மன் காளிகாம்பாள் மல்லி பூ மாலை அணிவித்து, வெள்ளை நிற பட்டுதுத்தி வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கோவிலிருந்து இருந்து புறப்பட்டு மேற்கு ராஜவீதி, பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், இரட்டை மண்டபம், வடக்கு ராஜா வீதி, சங்கர மடம் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.
வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.