BREAKING NEWS

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமலை முருகன்  கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றக்கூடி முருக பெருமானை ஆண்டு தோறும் தமிழ் ஆண்டுகளில் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரதன்று திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் ,இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தப்பூரில் உலகிலேயே மிக உயரமான

146 அடி உயரம் கொண்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் வருகின்ற 25ந்தேதி பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள கொடி மரத்தில் கொடியேற்றியேற்றப்பட்டு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியதை யடுத்து அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் மற்றும் அங்குள்ள மூலவர்களுக்கும் மகாதீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகனை தரிசித்தனர்.

CATEGORIES
TAGS