BREAKING NEWS

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராமமூர்த்தி நகர் பகுதிக்கு 22 நெம்பர் அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்று கொண்டிருந்தது அப்போது கல்பகனூர் கிராமம் அருகே பனந்தேப்பு பகுதி வழியாக சென்ற போது எதிரே வந்த பால் வண்டி மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் சாலையோரமாக பேருந்தை அவரது பக்கம் திருப்பும்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் பள்ளத்தில் அரசு பேருந்து சாய்ந்து விபத்துக்குள்ளானது, மேலும் அப்பகுதியில் பனைமரம் இருந்ததால் பேருந்து முழுவதும் சாயாமல் மரத்தின் மீது சாய்ந்த்து.

மேலும் இந்த பேருந்தில் காலை நேரம் என்பதாலும் பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அரசு பேருந்து சாலையோரம் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this…

CATEGORIES
TAGS