ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது
இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம கோவிலின் திருவிழா நாட்களின் பயன்படுத்தக்கூடிய பொது இடத்தில் கட்டப்பட இருப்பதால் கோவில் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை சென்று கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்
இந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பது கோவில் திருவிழா நடத்தப்படும் இடத்தில் கட்டப்பட உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் எனவும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்து கோரிக்கை மனுவினை வழங்கி உள்ளனர்