BREAKING NEWS

ஆறு தூர்வாரிய கழிவு மண்ணை சாலையில் கொட்டி வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

ஆறு தூர்வாரிய கழிவு மண்ணை சாலையில் கொட்டி வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அடுத்த மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் 2 – மாதங்களுக்கு முன்பு பொதுப்பணி துறை சார்பாக ஆறு தூர்வாரும் பணிகள் நடைபெற்றன.

பணிகள் முடிந்து 2 – மாதத்திற்கு மேலாகியும் ஆற்றிலிருந்து அள்ளப்பட்ட கழிவு மண்ணை சாலையிலேயே போட்டு சென்றுவிட்டனர்.தற்போது மண்ணிலிருந்து செடிகளும் முளைக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் மண்ணை மாற்ற வில்லை.

மேலப்பெருவிளையிலிருந்து கீழப்பெருவிளை வரை மிகவும் குறுகிய சாலைகள் என்பதால்

பள்ளி வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் சொல்ல முடியாமல் திணறி வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை பார்வையிட்டு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் கழிவு மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை.

CATEGORIES
TAGS