ஆற்காடு நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா.
ஆற்காடு நகராட்சியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 3.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆரணியில்யிருந்து சென்னை செல்லும் சாலையில் ஆற்காடு பேருந்து அருகே புதிய பேருந்து நிலையத்தில் தினசரி மார்க்கெட் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையிலும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தனலட்சுமி நகர மன்ற தலைவர் தேவிபென்ஸ்பாடியன் துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தண்ணீர் ஊற்றி அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற ஆணையர் கிருஷ்ணராம் நான்காவது நகர மன்ற உறுப்பினர் அணுஅருண்குமார்,அவைத்தலைவர் ராஜ் ,மாவட்ட பிரதிநிதி கஜேந்திரன், சரவணன் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்