BREAKING NEWS

ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு இவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில்
நிலத்தில்
வேர்க்கடலை,நெற்பயிர் போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார் இதனிடையே இவரது நிலத்திற்கு அருகாமையில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சவுடுமண் குவாரி ஒன்று அரசு அனுமதியோடு இயங்கி வருகிறது.இந்த நிலையில் விவசாயி பாபு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக தனியார் குவாரி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

3 அடி அளவு மட்டுமே சவுடு மண் எடுக்க வேண்டும் என்று அரசு ஆணை உள்ள நிலையில். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் 10 அடிக்கும் மேலாக மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு இதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இது மட்டுமல்லாமல் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்களை சேதப்படுத்தி தண்ணீர் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைப்புகளை சேதப்படுத்தினர். இது மட்டுமல்லாமல் அதிகாலை 5 மணி முதல் சுமார் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.மேலும் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு அரசு துறை அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால் இதனை பயன்படுத்திக் கொண்டு ஆரணி ஆற்றின் கரை உடைத்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக லாரிகள் மூலம் ஆற்றில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் இதுபோன்று சவுண்டு மண் குவாரி பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு,தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS