BREAKING NEWS

ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்

ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி , பால்குட திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது, 3000 பேருக்கு உணவளித்த சிங்கப்பூர் வாழ் தமிழர் :-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையில் வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் கிளை நதியான வீரசோழன் ஆற்றின் கரையில் ஒருபுறம் வெள்ளை நிற இலைகளுடன் கூடியதும், மறுபுறம் அடர் பச்சை நிறத்தில் உள்ள இலைகளுடன் அமைந்திருக்கும் வெள்ளை வேப்ப மரத்தடியில் அம்மன் எழுந்தருளி உள்ளார். இதனால் வெள்ளை வேம்பு மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் 67 ஆம் ஆண்டு காவடி பால்குட திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மஞ்சள் ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் ,அலகு காவடி, அலங்கார காவடி பால்குடங்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். விரதம் இருந்த பக்தர்கள் 16 அடி நீள அளவுகளை குத்தியபடி பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.

இதில் லோஹித் என்ற இரண்டு வயது சிறுவன் சிறிய அளவிலான அலங்கார காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் எடுத்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று.

மேலும் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.சிங்கப்பூர் வாழ் தொழிலதிபர் சேதுராஜன் சார்பில் 3000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS