BREAKING NEWS

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் குடியிருப்பு வாசிகள்-இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் குடியிருப்பு வாசிகள்-இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ளVgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கு வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களது 7 மாத குழந்தை கிரண் மயி.இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் குழந்தைக்கு தாய் உணவு ஊட்டி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குழந்தை தாயின் கையில் இருந்து இடறி கீழே விழுந்துள்ளது அப்போது அதிர்ஷ்டவசமாக முதலாவது மாடியில் பால்கனியின் சன்சைடு என சொல்லப்படும் சீட்டின் மீது விழுந்தது .இதனை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

இதையடுத்து குடியிருப்பு வாசிகள் கீழே பெரிய அளவிலான பெட்ஷீட் வைத்து குழந்தையை காப்பாற்ற முயல்வதும் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி வழியாக சிலர் ஏரி உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட் டுள்ளனர். குழந்தை கை கால்களில் சிறிய சிராய்பு காயங்களுடன் அவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை நலமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் திடீரென சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்தபோது குழந்தை ஒன்று மேற்குறை மீது விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் பதறிப்போன குடியிருப்பு வாசிகள் கூச்சிலிடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று குவிந்து குழந்தையை காப்பாற்ற முயன்றந்ததாகவும் குழந்தை கீழ்நோக்கி மெல்ல மெல்ல தவழ்ந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. குழந்தையை காப்பாற்றும் வகையில் இது பெட்சீட்டுகள் மெத்தையை போட்டு தயார் நிலையில் சிலர் காத்திருக்க இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியே மெர்குரி மீது ஏறி குழந்தையை பத்திரமாக காப்பாற்றினர் .. குழந்தை காப்பாற்றப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கடவுள் கிருபையென நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்..

CATEGORIES
TAGS