ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் கடந்த 2023 – 2024 ல் நடந்த திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார் திறமையாக செயல்பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 185 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி, 398 செல்போன்கள், ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 யை போலீசார் மீட்டு உள்ளனர்.
மீட்கப்ட்ட நகை, பணம் மற்றும் பொருட்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட நகைகளை பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க தங்க நகை கடை போல் காட்சியளித்தது. ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட நகை,பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரையும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் ( ஆவடி ) ஐமான் ஜமால், (செங்கு ன்றம்) பாலகிரு ஷ்ணன், போ க்குவரத்து துணை கமிஷனர் ஜெய லட்சுமி, உதவி கமிஷனர்கள் ஆவடி அன்பழகன், பட்டாபிராம் சுரேஸ்குமார், அம்பத்தூர் கிரி ஆகியோர் பங்கேற்றனர்.