BREAKING NEWS

ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

சீர்காழி அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநத சுவாமி கோவிலில் ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூர் கிராமத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் புற்று ரூபமாக மூலவராக வீற்றிருக்கிறார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த நந்தனார் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க செல்லும் போது திருப்புன்கூர் தளத்திற்கு வந்தடைந்தார். அப்பொழுது அவர் சிவபெருமானை தரிசிக்க சென்ற போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோவிலின் வாசலிலேயே நின்று சிவபெருமானை தரிசிக்க முயன்றார் ஆனால் கருவறை முன்பு இருந்த நந்தி பகவானை தாண்டி சிவபெருமானை அவரால் பார்க்க முடியவில்லை. தன்னால் இறைவனை காண முடியவில்லையே என மனதார சிவபெருமானை வேண்டிய நந்தனார் காத்திருந்தபோது தனது பக்தனின் வேதனையை அறிந்த சிவபெருமான் நந்தி பகவானை சற்று விலகி இருக்குமாறு பணிந்தார். அதன்படி நந்தி பகவான் கருவறை முன்பு நேராக இல்லாமல் இடதுபுறமாக சற்று விலகி இருந்தார். அப்போது வாசலில் இருந்தே இறைவனை நந்தனார் மனமுருகி வேண்டியதாக கோவில் வரலாறு தெரிவிக்கின்றது.இன்றளவும் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வெளியே நின்றே மூலவரை தரிசிக்கலாம் நந்தி பகவான் விலகியே இருப்பார். இவ்வளவு சிறப்புமிக்க இக்கோவிலில் நேற்று ஆவணி மாத சனி பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய வஸ்திங்கள் சாற்றப்பட்டு அருகம்புல். வில்வ இலை, பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும் சிவலோகநாத சுவாமியையும் வழிபாடு செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS