இந்தியாவின் முதல் ட்ரோன் கொரியர் சர்வீஸ்!- மதுரையில் அசத்தல்:
இந்தியாவின் முதல் ட்ரோன் கொரியர் சர்வீஸ்!- மதுரையில் அசத்தல்:
மதுரையில் ட்ரோன் மூலம் கொரியர் டெலிவரி சேவைக்கான முயற்சியை எஸ்டி கொரியர் நிறுவனம் மற்றும் ப்ளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து தொடங்கியுள்ளது.
மதுரையை ஹெலிக்கிப்டரில் சுற்றிப் பார்க்கும் சேவையை தொடங்கி உள்ள நிறுவனமும், ஏரோஸ்பேஸ் சர்வீஸில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ப்ளானட் எக்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் கொரியர் டெலிவரி சேவைக்கான முயற்சியில் பிரபல கொரியர் நிறுவனமான எஸ்டி கொரியருடன் இணைந்து ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ப்ளானட் எக்ஸ் மற்றும் TSAW ட்ரோன் நிறுவனமும் இணைந்து BVLOS (Beyond Visual line Of Sight) தொழில்நுட்பம் மூலம் ட்ரோன் டெலிவரி சேவைக்கான சோதனையை மதுரை தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள எஸ்டி கொரியர் மையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருக்கும் விநியோக மையங்களுக்கு ஆவணங்கள் மற்றும் சரக்கு விநியோக சேவைகளில் ட்ரோன்களை பயன்படுத்துவதன் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்தது.
இத்தகைய சேவைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் கே.கே நகர் மற்றும் கருப்பாயூரணியில் உள்ள தனியார் மருத்துவ கிடங்கிற்கு மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும், மதகுபட்டி ரோட்டில் உள்ள சதர்ன் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஆட்டோமொபைல் ஹார்டுவேர் பொருட்களையும், கடச்சனேந்தலில் உள்ள ஆம்வே ஹவுஸிற்கு உணவுப் பொருட்களையும் ட்ரோன் மூலம் கொண்டு சென்று சோதனை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வை பற்றி ப்ளானட் எக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய விமானப்படையின் முன்னாள் அதிகாரியுமான சதீஷ்குமார், “இந்த ட்ரோன் சோதனை நிகழ்வு சேவை செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி சாலை போக்குவரத்து தடைகளையும் தாண்டி தொலைதூர கிராமங்களையும் இணைகின்றன. இந்த சோதனையின் வெற்றியை தொடர்ந்து ட்ரோன் மூலம் மருத்துவதுறைக்கு உதவும் வகையில் ஒரு சங்கிலி அமைப்பை ஏற்படுத்தி அதில் சிகிச்சை மையம், ஆய்வகம் மற்றும் மருந்தகம் போன்றவற்றை இணைத்து பெரிதும் பயன்படும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதுபோன்ற, சோதனைகளின் வெற்றி தொழில்துறை வளர்ச்சி அடைய உதவும்” என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.