இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமையில் மத்திய ஒன்றிய அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் மத வெறுப்பு உணர்வை தூண்டி வருவதாகவும் , அதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடர்ச்சியாக இடிக்கப்பட்டு வருவதாகவும் , இதுபோன்று வழிப்பாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவதை கைவிட வேண்டும் .
மேலும் பன்முகத்தன்மை கொண்ட உலகிலேயே சிறந்த இந்தியாவின் பன்முகத்தன்மை மாறாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் ஞானவாபி மசூதி விகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளர் மாநில துணை தலைவர் E. ஃபாரூக் ,மாவட்ட துணைசெயலாளர் ஜாஃபர் மற்றும் இதில் மாவட்ட நிர்வாகிகள், இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.